இலங்கைவிளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற அருண தர்ஷன!

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற அருண தர்ஷன!

2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இலங்கை ஓட்ட வீரர் அருண தர்ஷன தகுதி பெற்றுள்ளார்.

இதற்கமைய அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

பரிஸ் ஒலிம்பிக்கிற்கான இலங்கை தடகள அணியில் தருஷி கருணாரத்ன மற்றும் நதீஷா லேகம்கே ஆகியோருடன் அருண தர்ஷனவும் இணைந்து கொண்டுள்ளார்.

அருண தர்ஷன அண்மையில் பஹாமாஸில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் 400 மீட்டர் போட்டியில் 45.90 வினாடிகளில் தனது தனிப்பட்ட சிறந்த நேரத்தைக் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

மேலும் சீனாவில் நடைபெற்ற 2 ஆவது Belt and Road Invitational தடகள சம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button