தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் ஏராளம் அதனால் இவரது படமாக இருந்தால் கண்டிப்பாக லாபம் தான் என்ற எண்ணம் உள்ளது.
அதுபோலவே ரசிகர் மத்தியில் இவருடைய படங்கள் மாபெரும் வெற்றி அடைந்து தற்போது ஒரு படத்திற்கு ரூ. 200 கோடி வரை சம்பளம் வாங்கும் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார்.
இவ்வாறு பல வெற்றி படங்களை கொடுத்த விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 – வது படமான கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், படக்குழுவினர் இயக்குனர் என அனைவரும் இந்த படத்திற்காக பல பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.
சமீபத்தில், இப்படத்தின் டிரைலர், பாடல்கள் என வெளிவந்து மாபெரும் ரீச் பெற்ற நிலையில், கோட் படத்தின் ஓவர்சீஸ் ப்ரீ புக்கிங் இதுவரை 1.3 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 10.9 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.