இந்தியாவில்,மிக முக்கிய கட்சியாக விளங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) காலமானார்.சுவாசப் பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீதாராம் யெச்சூரி காலமானார்.1952-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. ஆந்திராவைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பள்ளி, கல்லூரி பருவகாலத்தில் பணியாற்றியவர். 1984-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.