ஜப்பானின் தொலைதூர தீவான இசு தீவுகளுக்கு அருகே 5.6 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகள் இந்த சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், கடல் மட்டத்திலிருந்து 1 மீட்டர் (கஜம்) வரை அலைகள் உயரும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால் தீவில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.