அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பற்றி எரியும் காட்டுத் தீயால் பலர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 105 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் பற்றிய தீ வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக 35,000 குடியிருப்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.70 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு பரவியுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் 600 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் 3 வீரர்கள் தீக்காயமடைந்துள்ளனர். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, தீ பரவும் பகுதியின் அருகேயுள்ள மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.6) 44 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. 1877ஆம் ஆண்டுக்கு பிறகு மூன்றாவது முறையாக பதிவாகும் அதிகபட்ச வெப்பம் இதுவாகும். காடுகளில் திடீர் தீ விபத்து ஏற்பட, வெப்பநிலை அதிகரிப்பே காரணம் என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்