Homeஇலங்கைவிளையாட்டு

திமுத்திடம் மன்னிப்புக் கோரிய தினேஷ்!

திமுத்திடம் மன்னிப்புக் கோரிய தினேஷ்!

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று (26) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் திமுத் கருணாரத்ன ரன் அவுட் ஆனது  குறித்து தினேஷ் சந்திமால் கருத்து தெரிவித்துள்ளார்.

போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், திமுத் கருணாரத்னவிடம் மன்னிப்பு கோரியதாக தெரிவித்தார்.

“நான் வந்தவுடனே அவரிடம் (திமுத்) மன்னிப்பு கேட்டேன்.துரதிர்ஷ்டவசமாக அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

அப்போது அவர் என்னிடம், சந்தி சாத்தியமான ஓட்டங்களை மட்டுமே எடுப்போம். அவசர ஓட்டங்களை எடுக்க தேவையில்லை என்று கூறினார்.

எனினும் அந்த ஓட்டம் அவசர ஓட்டம் என்று நினைக்கிறேன்.

அந்த ஓட்டத்தை எடுக்க நான் மனதளவில் தயாராக இருக்கவில்லை.

ஏனென்றால், அப்போது தனக்கு காலில் காயம் இருப்பதாகவும், அதை சரிசெய்ய எனக்கு அவகாசம் தர வேண்டும் என்றும் திமுத் கூறினார்.

அதுதான் அங்கே நடந்தது. ஆனால் அது எனது தவறு. அந்தக் தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன்”. என்றார்.

முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்படும் போது, ​​தனது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, 03 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இலங்கை அணி சார்பாக தினேஷ் சந்திமால் தனது 16வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்ததுடன் 116 ஓட்டங்களையும் பெற்றார்.

இந்தப் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button