உலகம்
மொசாட்டின் தலைமையகத்தை நோக்கி ஹெஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல்
மொசாட்டின் தலைமையகத்தை நோக்கி ஹெஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல்
இஸ்ரேலின் புலனாய்வு பிரிவான மொசாட் அமைப்பின் தலைமையகத்தினை நோக்கி ஹெஸ்புல்லா அமைப்பு செலுத்திய ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியில் உள்ள மொசாட் தலைமையகத்தினை இலக்குவைத்தே ஹெஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேலிய தலைநகரை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
காசா பள்ளத்தாக்கில் பாலஸ்தீனியர்களின் கௌரவாமான துணிச்சலான எதிர்ப்பிற்கு ஆதரவாகவும் லெபனான் மக்களை பாதுகாப்பதற்காகவும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது