பேருவளை-மாகல்கந்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
49 வயதுடைய மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 303.500 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன