இஸ்ரேல் காசா போரில் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக, பிரான்ஸ் தனது Dixmude என்னும் ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பலை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்ப தயாராகி வருவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Dixmude கப்பல், வார துவக்கத்தில் புறப்பட்டு, சில நாட்களில் எகிப்தை சென்றடையும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், வார துவக்கத்தில், 10 டன்களுக்கும் அதிகமான மருத்துவப் பொருட்களை ஏற்றிச் செல்லும் விமானம் ஒன்றையும் காசாவுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நவம்பர் 23 மற்றும் 30 ஆம் திகதிகளில், ஐரோப்பிய விமானங்களில் மருத்துவ உபகரணங்களை அனுப்பும் ஐரோப்பிய முயற்சியிலும் பிரான்ஸ் தனது பங்களிப்பைச் செய்யும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், காசா பகுதியில் உள்ள, அவசர சிகிச்சை தேவைப்படும் காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை வெளியேற்றி மருத்துவமனைகளுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் துவக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு பயன் கிடைக்குமானால், அவசியமானால், 50 குழந்தைள் வரை, சிகிச்சைக்காக பிரான்சில் உள்ள மருத்துவமனைகளுக்கு விமானம் மூலம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் மேக்ரான் சமூக ஊடகமான எக்சில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.