சமூக வலைத்தளங்களில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட 19 வயது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முந்தலம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தலுஓயா பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் பிரசுரித்தமை தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்