Shanu
Matale
நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பவுலுக் சில்வா மாவத்தையில் திரும்பும் சந்திக்கு அருகில் உள்ள நீர் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (09) இடம்பெற்றதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீதவான் விசாரணையின் பின்னர், சடலம் நீர்கொழும்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்