இலங்கை மகளிர் பெப். 22 நியூசிலாந்து சுற்றுப்பயணம்
இலங்கை மகளிர் பெப். 22 நியூசிலாந்து சுற்றுப்பயணம்

Shanu
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை மகளிர் அணி எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.இதன்படி இலங்கை மகளிர் அணி நியூசிலாந்து மகளிர் அணியுடன் தலா மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. நியூசிலாந்து சென்ற சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி இரண்டு பயிற்சிப் போட்டிகளில் ஆடவுள்ளது. இந்தப் போட்டி லின்கனில் எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறும்.இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நெப்பியரில் மார்ச் 4 ஆம் திகதி நடைபெறும். அடுத்த இரு போட்டிகளும் மார்ச் 7 மற்றும் 9 ஆம் திகதிகளில் நெல்சன், செக்ஸ்டோன் ஓவலில் நடைபெறவுள்ளன.ஒருநாள் தொடரை அடுத்து இலங்கை மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் ஆடவிருப்பதோடு இதன் முதல் இரு போட்டிகளும் கிறிஸ்சேர்ச்சில் மார்ச் 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இரு அணிகளும் ஆடும் மூன்றாவது டி20 போட்டி டுனடினில் மார்ச் 18 ஆம் திகதி நடைபெறும்.இலங்கை மகளிர் அணி இரு தரப்பு கிரிக்கெட் தொடர் ஒன்றுக்காக நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வது சுமார் 10 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். எனினும் கடந்த 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்து மகளிர் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடிய தலா மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஒருநாள் தொடரை 2–1 என கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது