Homeஉலகம்பிரான்ஸ்

உடல்நிலை மீண்டும் மோசம்

உடல்நிலை மீண்டும் மோசம்

Shanu

.அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி 88 வயதான போப் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.சோதனைகளில் சுவாச தொற்று இருப்பது தெரியவந்ததால், அவரது உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது ரோமிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் உடல் நலக் குறைவு காரணமாக பிரதான மதக் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்தும் அண்மைக்காலமாக விலகியிருந்தார்.

இதேவேளை, கடந்த 2021 மற்றும் 2023 ஆண்டுகளில் சத்திர சிகிச்சைகளுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button