Homeஇலங்கைகனடா

போலி விசா மூலம் கனடா செல்ல முயன்ற யாழ். தம்பதி

போலி விசா மூலம் கனடா செல்ல முயன்ற யாழ். தம்பதி

Shanu

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று முன்தினம் (17) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மனைவியும் 40 வயதுடைய கணவனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு 08.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, சோதனை நடவடிக்கைகளுக்காக தமது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பித்தபோது, அந்த ஆவணங்களில் சந்தேகம்கொண்ட விமான நிலைய அதிகாரிகள், அதனை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேகநபர்களின் கனடா விசா போலியானவை என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தரகர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபா தருவதாக கூறி இந்த போலி கனடா விசாவை தயாரித்துள்ளதாகவும், ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் சென்று பின்னர் அங்கிருந்து கனடாவுக்கு தப்பிச் செல்ல தயாராக இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளன.

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button