
Shanu
தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் வெளியானது.
மலையாளத்தில் வெளியான ப்ரேமலு போல நியூ ஏஜ் ரொமான்டிக் காமெடி படமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் சற்று கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது.
இட்லி கடை திரைப்படம் அடுத்த மாதம் திரையில் வெளியாகவுள்ளது. தனுஷ், அருண் விஜய், நித்யா மேனன் ஆகியோரது நடிப்பில் உருவான இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகின்றது.
இதனை படக்குழு இரண்டு முறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அதே தினத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாக இருக்கின்றது. அஜித் நடிப்பில் ஆதிக் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. சில தினங்களுக்கு முன்பு தான் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது.
அஜித் ரசிகர்கள் ஒரு சிலர் இட்லி பாத்திரத்திற்கு மாலை போட்டு கிண்டல் செய்தும் வருகின்றனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் அஜித் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அஜித் ரசிகர்கள் தனுஷை விமர்சிப்பதை பார்த்து விஜய் ரசிகர்கள் தனுஷிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.