
Shanu
விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் மார்ச் 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் பூமிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 9 மாதங்களுக்கும் மேலாக தங்கியுள்ளனர்.அவர்கள் இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஜூன் 5, 2024 அன்று விண்வெளிக்கு சென்றனர்.
அவர்கள் எட்டே நாட்களில் பூமிக்கு திரும்பி வர வேண்டியது.ஆனால் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கிய போது பல பிரச்னைகளை சந்தித்தது.
விண்கலத்தை வழிநடத்தும் அதன் ஐந்து உந்துவிசை அமைப்புகள் செயலிழந்தன. அதிலிருந்த ஹீலியமும் தீர்ந்து போனது.
இதன் காரணமாக இவர்கள் இருவரும் பூமிக்கு திரும்புவது தாமதமானது.