
Shanu
ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தான் யார் என நிரூபித்துவிட்டார். அண்ணாத்த படத்திற்கு பிறகு இனி ரஜினியின் படங்கள் ஓடாது என்றெல்லாம் விமர்சித்தவர்களுக்கு ஜெயிலர் மூலம் தரமான பதிலடி கொடுத்தார் தலைவர்.
நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் 700 கோடி வரை வசூலித்தது.
இப்படத்தை தொடர்ந்து புது உத்வேகம் பெற்ற ரஜினி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடிக்க துவங்கினார்.
அந்த வகையில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இருந்தாலும் வசூல் ரீதியாக வேட்டையன் வெற்றிப்படமாகவே அமைந்தது.
இந்நிலையில் வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.