பாகிஸ்தானில் புகையிரதத்தின் மீது ஆயுதக்குழுவினர் தாக்குதல்

Shanu
பாகிஸ்தானில் 450க்கும் அதிகமான புகையிரத பயணிகளை ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் பணயக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளதை தொடர்ந்து பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் – ஈரான் எல்லைகளுக்கு அருகில் உள்ள பலோச்சிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தின் மீது ஆயுதக்குழுவினர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் புகையிரத சாரதி மீது தாக்குதலை மேற்கொண்டு அவருக்கு காயத்தை ஏற்படுத்திய பின்னர் புகையிரதத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
புகையிரதத்தில் பயணம் செய்துகொண்டிருந்த 450 பேரும் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள புகையிரத நிலைய அதிகாரியொருவர் அவர்களில் பெண்களும் குழந்தைகளும் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்காக போராடும் ஏனையவர்கள் தங்கள் வளங்களை சுரண்டி இலாபமீட்டுவதாக குற்றம்சாட்டி வரும் பலோச்சிஸ்தான் இராணுவம் என்ற அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது.
புகையிரத பாதைக்கு குண்டுவைத்த பின்னர் புகையிரதத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக பலோச்சிஸ்தான் இராணுவம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பயணிகளை மீட்பதற்கு முயற்சி செய்தால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.