விளையாட்டு

CSK தோனி மீது குற்றச்சாட்டு..!

Shanu

சாம்பியன்ஸ் டிராபி தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது முறையாக வென்று இருக்கிறது. இதன் மூலம் டி20 உலக கோப்பை சாம்பியன்ஸ் டிராபி தொடர் என இரண்டு ஐசிசி கோப்பைகளை கேப்டனாக ரோகித் சர்மா வென்றுவிட்டார்.

தோனி இல்லாமல் இந்திய அணியால் ஒரு ஐசிசி தொடரை கூட வெல்ல முடியாது என்று அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஆறு மாத இடைவெளியில் ரோகித் சர்மா சம்பவம் செய்துவிட்டார்.

மேலும் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் நான்கு ஐசிசி கோப்பைகளை வென்று அதிக ஐசிசி கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் என்ற சாதனையை படைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான தோனி, டெஹ்ராடூன் சென்றிருந்த நிலையில் அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வென்றிருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு தோனி கோபமாக இங்கிருந்து விலகி செல்லுங்கள் என்பது போல் கையை காட்டினார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்தியா வென்றதற்கு ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், தோனி அது குறித்து எந்த ஒரு பதிலும் சொல்லாமல் கோபமாக சென்று செய்தியாளர்களுக்கு பேட்டி தர மறுத்துவிட்டார். இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்தியா வென்று விட்டதால் தோனிக்கு பொறாமை ஏற்பட்டு விட்டதாக குற்றச்சாட்டி உள்ளனர். தம்மால் தான் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்றும் வேறு யாரும் இந்தியாவுக்கு கோப்பையை பெற்று தந்து விடக்கூடாது என்ற தீய எண்ணத்தில் தோனி இருந்தது தற்போது வெளிப்படையாக தெரிந்து விட்டதாக ரசிகர்கள் சாடி இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் தோனியின் இந்த செயல் மிகவும் வெட்கக்கேடானது என்றும் யுவராஜ் சிங் தந்தை தோனி குறித்து சொன்ன கருத்து எல்லாம் உண்மைதானா என்று பலரும் சமூக வலைத்தளத்தில் சாடி இருக்கிறார்கள். தோனி இவ்வளவு சுயநலம் மிக்க நபராக இருப்பார் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.

மேலும் சிலர் விராட் கோலி, ரோகித் சர்மா தயவில் தான் தோனி மூன்று ஐசிசி கோப்பையை வென்றதாகவும் ஆனால் தோனி இல்லாமல் இருவரும் இரண்டு ஐசிசி கோப்பையை கைப்பற்றி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இதற்கு பதிலடி தந்துள்ள தோனி ரசிகர்கள், ரோகித் சர்மாவை தொடக்க வீரராக ஆக்கியதும், விராட் கோலியை கேப்டனாக ஆக்கியதும் தோனி தான் என்பதை மறந்து விடாதீர்கள் என்றும் அவர் மாஸ்க் போட்டு இருந்ததால் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்றும் இதற்கு வேறு காரணம் கிடையாது என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button