உலகம்
Trending

ஃபேஸ்புக்கின் பெயரை மாற்றினால் ஒரு பில்லியன் டாலர் கொடுக்க தயார் – மார்க்கை வம்புக்கு இழுக்கும் எலான் மஸ்க்..!!

சோசியல் மீடியா உலகில் எப்போதுமே பரபரப்பிற்கு பஞ்சம் இருப்பதில்லை. அதுவும் பிரபல தொழிலதிபரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க்கைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இவர் கூறும் கிண்டல்களும், சர்ச்சைப் பேச்சுகளும் வழக்கத்திற்கு மாறான யோசனைகளும் அவ்வப்போது தலைப்புச் செய்திகளில் இடம் பிடிப்பவை.

இந்த முறை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க்கை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் இடையே பல பஞ்சாயத்துகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மாற்றினால் மார்க் சக்கர்பெர்க்கிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் தருவதாக உறுதி அழித்துள்ளார் எலான் மஸ்க்.

எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு குறித்து முதலில் பகடியான செய்திகளை வெளியிடும் பாபிலோன் பீ (BabylonBee) என்ற தளம்தான் வெளியிடிருந்தது. இது உண்மைதான் என உறுதி செய்துள்ள மஸ்க், ‘ஃபேஸ்பூப்’ என பெயர் வைத்தால் சரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் இரண்டு பெரும் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு இடையே வார்த்தை போர் ஆரம்பித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கூட மார்க் சக்கர்பர்க்கிற்கும் எலான் மஸ்கிற்கும் இடையே கூண்டுக்குள் குத்துசண்டை போட்டி நடைபெறப் போகிறது என இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்காக பயிற்சியில் ஈடுபடுவதாக கூட மார்க் பதிவிட்டிருந்தார். இத்தாலியில் நடைபெறுவதாக கூறப்பட்ட இந்த சண்டை, நடக்குமா, நடக்காதா என இன்னும் உறுதியாக தெரியவில்லை. அவருக்கு இதில் பெரிதாக ஆர்வம் இல்லை என மஸ்க்கை குற்றம் சாட்டுகிறார் சக்கர்பர்க்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button