சினிமா
Trending

அந்த ஒரு காரணத்துக்காக பாராட்டுக்களை அள்ளப்போகும் ‘கார்த்தி 27’ – வெளியானது மாஸ் அப்டேட்…!!

கார்த்தி நடிப்பில் கடைசியாக ‘ஜப்பான்’ படம் வெளியாகி இருந்தது. ராஜு முருகன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. இதனையடுத்து தற்போது தனது அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் கார்த்தி.

அந்த வகையில் நடிகர் கார்த்தி ’96’ திரைப்பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான தனது முதல் படத்திலே ரசிகர்களை கவர்ந்தவர் பிரேம்குமார். அனைவரும் பள்ளிக்கால காதலை நினைவுப்படுத்தும் விதமாக வெளியாகி அமோக வரவேற்பினை பெற்றது ’96’.

இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது அடுத்த படத்தினை இயக்கி வருகிறார் பிரேம்குமார். கார்த்தியின் 27 வது படமாக உருவாகவுள்ள இதில் அரவிந்த் சாமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையும், பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவும் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் குறித்து தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கார்த்தி 27 படத்திற்கு ‘மெய்யழகன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஆங்கில பட தலைப்பு கொண்ட படங்கள் வெளியாகி வரும் நிலையில் கார்த்தி படத்திற்கு அழகான தமிழ் பெயரில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்களை அள்ளி வருகிறது. மேலும், இப்படத்தில், சின்னத்திரை நடிகை சுவாதி கொண்டே ஹீரோயினாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button