உலகம்
Trending

அமெரிக்காவிற்கு விசிட் அடித்த ஏலியன்கள்?; வானத்தில் இருந்து இறங்கிய மர்ம உருவம்? – போலீசார் குவிப்பு…!!

அமெரிக்காவில் ப்ளோரிடாவில் உள்ள மியாமியில் இருக்கும் மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியாகும் செய்திகள் இணையத்தை உலுக்கி உள்ளன. 10 அடி உயரமுள்ள வேற்றுகிரக ஏலியன் ஒன்று மியாமி ஷாப்பிங் மாலில் சுற்றித் திரிந்ததாக புகார்கள் வந்ததால், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பேசைட் மார்க்கெட்பிளேஸுக்கு வெளியே ஒரு பெரிய உருவம் உலா வருவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகளால் சூழப்பட்ட அந்த மாலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதேபோல் அந்த மாலுக்கு மேலே ஏலியனின் வாகனங்கள் என்று கூறப்படும் யுஎப்ஓ போன்ற பறக்கும் தட்டுகளின் வெளிச்சங்கள் தென்பட்டதும் வீடியோவாக வெளியாகி உள்ளது. வீடியோ வைரலானவுடன், ஏலியன்கள் தொடர்பான ஊகங்களும் இணையம் முழுக்க பரவின.

அதே சமயம் அங்கே 50 இளைஞர்கள் சேர்ந்து கலவரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த கலவரம் குறித்தும் உறுதியான செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை. அங்கே வானத்தில் விளக்குகள் இங்கும் அங்கும் நகரும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி இணையத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது. அந்த வெளிச்சம் என்ன? அது ஏலியனா? உண்மையில் ஏலியன் பூமியை விசிட் செய்ததா என்ற கேள்விகள் இணையத்தை உலுக்கி உள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button