சினிமா
Trending

ஆத்தாடி! சைக்கோ கில்லரை விட பயங்கரமா இருக்கே? – சாண்டியின் அடுத்த பட போஸ்டர் வெளியீடு…!!

லியோ படத்தில் சீரியல் கில்லராக வந்த சாண்டி புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். இந்த படத்தின் மிரட்டலான போஸ்டர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படத்தில் விஜய், த்ரிஷா, பிரியா மணி, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சாண்டி என பலர் நடித்துள்ளனர்.

நடன இயக்குநரான சாண்டி மாஸ்டர் லியோ படத்தில் சைக்கோ கில்லராக நடித்திருந்தார். படம் ஆரம்பிக்கும் போது ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும், இவரின் சைக்கோ தனமான நடிப்பு பாராட்டை பெற்றது.

லியோ படத்தை தொடர்ந்து சாண்டி மாஸ்டன் புகழ் உச்சமடைந்து கன்னட இயக்குனர் ஷூன்யா இயக்கும் படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். ‘ரோசி’ என்ற தலைப்பு கொண்ட இந்த படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது.

இந்த முதல் லுக் போஸ்டரில் சாண்டி மாஸ்டர் திருநங்கை போல மிகவும் வித்தியாசமான தோற்றத்துடன் காட்சி அளித்துள்ளார். இந்த படத்தில் ஆண்டாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இது அவருக்கு சினிமாவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் லியோ படத்தை விட பயங்கரமா இருக்கே என்று கருத்துக்கூறி வருகின்றனர். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button