சினிமா
Trending

ஆர்.ஜே பாலாஜியின் படத்தில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ் – இயக்குனர் கூறிய சூப்பர் தகவல்…!!

தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்த அடுத்த சில படங்களை இயக்கவிருக்கிறார். இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜியின் படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, கிஷேன் தாஸ், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் தான் சிங்கப்பூர் சலூன். இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி மெயின் ரோலில் நடிக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக சிவானி ராஜசேகர் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருப்பதாக அந்த படத்தின் இயக்குனர் கோகுல் கூறியிருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவின் சலூனுக்கு முடி திருத்தம் செய்ய வரும் பிரபலமாக லோகேஷ் கனகராஜ் நடிக்கவிருக்கிறார்.

இதுகுறித்து சிங்கப்பூர் சலூன் படத்தின் இயக்குனர் கோகுல், கொரோனா குமார் படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் நான்கு முறை கேட்டதாகவும், அந்த படம் குறித்த பதிவை லோகேஷ் கனகராஜ் அவரது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டதாகவும் கூறினார்.

மேலும், மாநகரம் படத்தின்போதே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் கோகுல் அறிமுகமாகினார்களாம். லோகேஷ் மாநகரம் படத்தை இயக்கியபோது கோகுல் அவரது காஷ்மோரா படத்தை இயக்கி கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button