உலகம்
Trending

இன்னும் ஐந்தே ஆண்டுகள் தான்; AI என்ன செய்யும் தெரியுமா? – பில் கேட்ஸ் சொல்வதை பாருங்க..!!

சர்வதேச அளவில் இப்போது புயலைக் கிளப்பிய தொழில்நுட்பம் என்றால் அது ஏஐ தொழில்நுட்பம் தான். குறிப்பாக சாட் ஜிபிடிக்கு கிடைத்த வெற்றி மற்ற ஏஐ மாடல்களுக்கும் மிகப் பெரிய உந்துதலாக அமைந்தது. மற்ற ஏஐ மாடல்களிலும் முதலீடுகள் குவிய ஆரம்பித்தன. மருத்துவம், தொழில்நுட்பம், முதலீடு என பல்வேறு துறைகளிலும் புது புது ஏஐ மாடல்கள் வரத் தொடங்கின. அதேநேரம் இது வேலையிழப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு வேற லெவலில் வளர போகிறது. அதேநேரம் இந்த தொழில்நுட்பத்தைப் பார்த்து நாம் அச்சப்படத் தேவையில்லை. இதன் மூலம் நமக்குப் பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.

இது குறித்து பில் கேட்ஸ் மேலும் கூறுகையில், ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும் போதும் அச்சம் வரத் தான் செய்யும். இதனால் வேலைவாய்ப்புகள் காலியாகும் என்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்காது. 1900இல் விவசாய உற்பத்தியைத் தாண்டி எதுவும் இருக்காது என்று நினைத்தோம். ஆனால் இப்போது விவசாய வேலைகளைத் தாண்டி பல புதிய வேலைகள் உருவாக்கியுள்ளோம். இதனால் மக்கள் வாழ்க்கையும் மேம்பட்டே இருக்கிறது.

இந்த ஏஐ அதுபோலத் தான் இருக்கும். இது மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.. பல்வேறு தரப்பினருக்கும் இது மிகப் பெரியளவில் உதவும். மக்களின் வாழ்க்கையை இது ஈஸியாக்கும். இந்த ஏஐ கணினி போல இல்லை. அதை அணுக உங்களுக்கு பிரத்தியேக கருவி எல்லாம் தேவையில்லை. ஏற்கனவே இருக்கும் கம்ப்யூட்டர் அல்லது மொபைலை இணையத்தில் கணெக்ட் செய்தாலே போதும். நம்மால் ஏஐ சாதனங்களை அணுக முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button