இலங்கை
Trending

இலங்கைக்கு சீனா வழங்கிய 100 இயந்திரங்கள் – பிரதமர் விடுத்த வேண்டுகோள்..!!

இலங்கையில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை வலுவூட்டும் நோக்கிலும் 100 முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் சீனாவால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (08) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

சீனாவில் யுனான் மாகாணத்திற்கு விஜயம் போது பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோளுக்கு இணங்க, சீனத் தூதுவர் கியு ஷென் ஹொன் அவர்கள் 100 முட்டை அடைகாப்பகங்களை பிரதமரிடம் வழங்கியதுடன், இந்த இயந்திரங்கள் விவசாய அமைச்சின் ஹதபிம அதிகாரசபையால் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சீனத் தூதுவர் கியு ஷென் ஹொன், சீனா இலங்கையின் சிறந்த நண்பன் என்ற வகையில் இலங்கையின் கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் தினேஷ் குணவர்தன முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு எப்போதும் பூரண ஆதரவை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நிகழ்வில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான டி. பி. ஹேரத், ஜானக வக்கும்புர, காதர் மஸ்தான், சிவநேசதுரை சந்திரகாந்தன், திரு.சமல் ராஜபக்ஷ மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, ஹதபிம அதிகாரசபையின் தலைவர் சரத் சந்திரசிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button