இலங்கை
Trending

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எப்போது? – வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக, கட்சியின் தலைவரான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் என அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அதேவேளை இம்மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது என்ற தகவலில் உண்மை இல்லை என்றும் அவர் கூறினார்.

அத்துடன் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படவுள்ளதாக தெரிவித்த அகிலவிராஜ் காரியவசம் , அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறாது என்றும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button