இலங்கை
Trending

இலங்கையில் முதன்முறையாக ஸ்தாபிக்கப்படவுள்ள சர்வதேச ஆய்வு மையம்…!!!

இலங்கையில் முதன் முறையாக சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இந்த ஆய்வு மையத்தை அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்கள் இணைந்து வழங்கும் முதலீட்டின் ஊடாக பேருவலையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்காக 10 லட்சம் அமெரிக்க டொலர் ஆரம்ப முதலீடாக மேற்கொள்ளப்படவுள்ளன.

பேருவளையில், சைனாபோட் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை இரத்தினக்கல் கண்காட்சியின் போது இவ் விடயம் அறிவிக்கப்பட்டது.

பெந்தோட்டையில் இடம்பெற்ற இந்த கண்காட்சி நேற்று நிறைவடைந்தது.

இந்த கண்காட்சியை காண்பதற்காக பல வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளுர் இரத்தினக்கல் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்குகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button