உலகம்
Trending

உணவுத்துறையில் தடம்பதிக்கும் மார்க் – சிறந்த மாட்டு இறைச்சியை விநியோகம் செய்வதே நோக்கம் என பதிவு..!!

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் நிறுவனரான மார்க் சக்கர்பர்க், பல்வேறு துறைகளில் தடம் பதித்து பல சாதனைகளையும் புரிந்துள்ளார். அந்தவகையில் தற்போது மாடு வளர்ப்பு தொழிலில் களமிறங்கியுள்ளார். மாடுகளுக்கு சோளம், புற்கள் மற்றும் தீவணத்தைப் போட்டுப் பார்த்திருப்போம். ஆனால், மார்க் தனது நிறுவனத்தின் சிறந்த மாட்டு இறைச்சியை உருவாக்குவதற்காக தங்கள் பண்ணையில் உள்ள மாடுகளுக்கு உலர் விதைகள், உள்ளூரில் தயாரிக்கப்படும் பீர் ஆகிவற்றை கொடுத்து வளர்த்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹவாயில் இருக்கும் கவாய் எனும் தீவில் பாதியை தனக்கு சொந்தமாக்கியுள்ள மார்க், அங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பண்ணை ஒன்றை அமைத்து வருகிறார். 1,400 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைத்து அதை சுற்றி சுவர் எழுப்பி வருகிறார்.

இந்த நிகழ்வு குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மார்க் சக்கர்பர்க், தனது நிறுவனத்தின் மாட்டிறைச்சியை சாப்பிடும் புகைப்படத்தை அதனுடன் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “உயர்தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே எனது இலக்கு. அதற்காக எனது பண்ணையில் வளர்க்கும் மாடுகளுக்கு மக்காடமியா கொட்டைகள் மற்றும் பீர் போன்றவை உணவாக கொடுக்கிறோம். இதன்மூலம், தரமான இறைச்சியை தயாரிக்கலாம். இந்த பீர் மற்றும் மக்காடமியா கொட்டைகளும் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக பல ஏக்கர் பரப்பளவில் மக்காடமியா மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

தன்னுடைய எல்லா தொழில்களிலும் பெரும் ஈடுபாடு காட்டிலும் இந்த முயற்சி சுவையான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திடீரென மார்க் சக்கர்பெர்க் மாட்டிறைச்சி தொழில் தொடங்கியுள்ளதை அடுத்து அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களும், அதேசமயம் எதிர்ப்புகளும் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button