இந்தியா
Trending

உதயநிதிக்கு உறுதி தந்த பிரதமர் மோடி – டெல்லி சந்திப்பில் நடந்தது என்ன?

இந்தியா: தமிழ்நாடு

கிரிக்கெட், ஹாக்கி போட்டிகளைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் திறமையான வீரர்களை கண்டறிந்து பயிற்சி வழங்கி ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளுக்கு தயார் செய்யும் வகையில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுகிறது. சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் ஜனவரி 19ம் தேதி முதல் 31 வரை நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டியின் துவக்க விழாவை சென்னையில் மிகப்பெரிய அளவில் நடத்த தமிழக விளையாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் நேற்று மாலை நேரில் சந்தித்து சென்னையில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவிற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.?

இதுதொடர்பாக உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளையோர் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தேன்.

மேலும், தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த கன மழை மற்றும் வெள்ள பாதிப்பை எடுத்துரைத்து, நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிய வண்ணம், பேரிடர் நிவாரண நிதியை தமிழ்நாட்டுக்கு உடனே ஒதுக்கீடு செய்யுமாறும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தேன். தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமரும் உறுதியளித்தார். மேலும், தமிழகத்தின் பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும், குறிப்பாக தமிழகத்தில் விளையாட்டுத்துறையின் பன்முக வளர்ச்சி குறித்து பிரதமருடன் விவாதித்தேன் என்று விவரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியையும் உதயநிதி ஸ்டாலின் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “சகோதரர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி. அன்னை சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் குறித்து ராகுல் காந்தி தனது கவலையை வெளிப்படுத்தினார். இந்தியாவின் மதச்சார்பின்மையை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பாகவும் உரையாடினோம்” என்று தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button