சினிமா
Trending

உயிர்க்கு போராடிய உதவி இயக்குனர் – ஓடோடி வந்து உதவிய சிம்பு..!

சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகின்றார். மாநாடு படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்த சிம்பு தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என வெற்றிப்படங்களாக கொடுத்து வருகின்றார்.

சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமலின் தயாரிப்பில் STR 48 படத்தில் நடிக்க இருக்கின்றார் சிம்பு. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்காக சிம்பு தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றார்.

இதையடுத்து சிம்பு தற்போது செய்திருக்கும் ஒரு உதவி தான் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு பாராட்டப்பட்டு வருகின்றது.

சிம்புவின் நடிப்பில் கிருஷ்ணாவின் இயக்கத்தில் இந்தாண்டு வெளியான திரைப்படம் தான் பத்து தல. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சரவணன் என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தற்போது உயிருக்கு போராடி வரும் சரவணனுக்கு சிம்பு நிதி உதவி செய்துள்ளார்.

வெளிநாட்டில் இருக்கும் சிம்புவிற்கு இந்த செய்தி தெரியவர ஓடோடி வந்து உதவியுள்ளார். அவருக்கு தெரிந்தவர்கள் மூலமாக ரூபாய் ஒரு லட்சத்தை சரவணனின் மருத்துவ செலவிற்கு வழங்கியுள்ளார் சிம்பு. இந்த சமயத்தில் சிம்பு உதவி மிகப்பெரியது என சரவணனின் குடும்பத்தார் கூறி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button