சினிமா
Trending

என் வாழ்க்கைக்கு வந்ததற்கு நன்றி – சித்தார்த், மாதவனுக்கு நன்றி சொன்ன நயன்தாரா…!!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது அதிக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாராவின் அடுத்த படமான தி டெஸ்ட் திரைப்படம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் போஸ்டர் ஒன்றை கடந்த நவம்பர் 12ஆம் திகதி நயன்தாரா அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். எனினும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2023ன் ஏப்ரல் மாதமே தொடங்கியது. அறிமுக இயக்குனரான சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் என பல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்ட இந்த கதையில் கிரிக்கெட் சார்ந்த பல விஷயங்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தியளவில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். இதற்காக தான் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் குமுதாவாக இருப்பதை மிஸ் செய்யப்போவதாகவும், இந்த வாய்ப்பினை கொடுத்து இயக்குனர் போன்றவர்களுக்கும் நன்றி சொல்லி இருக்கிறார்.

டெஸ்ட் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரமான குமுதா குறித்து அவரது சமூக வலைத்தளத்தில் உன்னை போன்ற ஒருவர் என் வாழ்க்கைக்கு தேவைப்படும் நேரத்தில் என் வாழ்க்கைக்கு வந்ததற்கு நன்றி. குமுதாவாக இருப்பதை கண்டிப்பாக மிஸ் செய்வேன். குமுதாவை கொடுத்ததற்கு இயக்குனர் சசிகாந்த்திற்கு நன்றி. குமுதாவின் மிகப்பெரிய பலமாக இருந்ததற்கு மாதவனுக்கு நன்றி. குமுதாவின் மிகப்பெரிய ஊக்கமாக இருந்ததற்கு சித்தார்த்துக்கு நன்றி. கூடிய விரைவில் டெஸ்ட் படத்தை பார்க்க காத்திருக்கிறேன் என நயன்தாரா அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button