இலங்கை
Trending

கட்டுநாயக்க விமான சேவைகள் நிறுவனத்திற்கு புதிய தலைவர்…!!

கட்டுநாயக்க விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவராக பொறியியலாளர் அதுல கல்கெட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனம் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதுல கல்கெட்டிய , இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்திற்கு பின்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

நிகழ்வில் , விமான நிலையத்தின் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் பிரதித் தலைவர்கள் உட்பட புதியதலைவரின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button