கனடா
Trending

கனடிய நாணய குற்றிகளில் ஏற்படும் மாற்றம்

கனடாவில் பயன்பாட்டில் உள்ள நாணயக் குற்றிகளில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ஸின் உருவப்படம் பொறிக்கப்பட உள்ளது.

அனைத்து நாணய குற்றிகளிலும் விரைவில் இந்த உருவப்படம் பொறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர் சார்ள்ஸ் தனது 75 ஆம் பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபத்தின் உருவப்படம் நாணயத்தாள்களிலும் நாணய குற்றிகளிலும் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் மறைவை தொடர்ந்து மன்னராக பதவி ஏற்று கொண்ட மூன்றாம் சார்ஸ் மன்னரின் உருவப்படம் இனிவரும் காலங்களில் கனடிய நாணயத்தாள் மற்றும் நாணய குற்றிகளில் பொறிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாத இறுதிக்குள் புதிய நாணயக் குற்றிகள் அச்சிடப்பட உள்ளதாகவும் டிசம்பர் மாதம் இந்த நாணய குற்றிகள் புழக்கத்தில் விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரீடம் இல்லாத மன்னரின் உருவப்படம் ஒன்று நணயப் குற்றிகளில் பொறிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 350 கலைஞர்கள் இந்த நாணயக் குற்றிகளில் பொறிப்பதற்கான உருவப்படத்தை வரைந்துள்ளனர்.

இந்த வடிவமைப்புகளை பிரித்தானிய பங்கிங்ஹாம் மாளிகைக்கு அனுப்பி அதில் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், கனடாவின் பிரபல ஸ்டீவன் ராஷ்டியின் வடிவமைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button