Homeஉலகம்

சிறுமி மீது ஏறிய கார்! பதற வைக்கும் வீடியோ

சிறுமி மீது ஏறிய கார்! பதற வைக்கும் வீடியோ

சைக்கிள் ஓட்டி வந்த சிறுமி ஒருவர் கார் ஒன்றில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் திஷா பட்டேல் என்ற சிறுமி, ஸ்பர்ஷ் வில்லா சொசைட்டி வளாகத்தில் சைக்கிள் ஓட்டுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளன. சிறிது நேரம் கழித்து, அவர் முன்னே ஒரு கார் வந்தது.

காரை பார்த்த சிறுமி சமநிலையை இழந்து சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். ஆனால் சுதாகரித்து எழுவதற்குள், அந்த கார் அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளன.

சிறுமியின் மீது கார் மோதியவுடன் காரை நிறுத்திவிட்டு இறங்கிய ஓட்டுநர் சிறுமியை பார்க்க வெளியே வருகிறார். அதற்குள் சிறுமி உயிரிழந்து விட்டார்.

கார் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து பொலிசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button