இந்தியா
Trending

தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம்..!!

தமிழ்நாடு

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று (28) காலை காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

மறைந்த விஜயகாந்த் உடல் அவரின் சாலிகிராம இல்லத்துக்கு முதலில் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு குடும்ப உறுப்பினர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இதனிடையே, அங்கே அவரது உடல் நாளை மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், நாளை மாலை 4.30 மணியளவில் தேமுதிக அலுவகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியானது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளன.

விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் எல்கே சுதீஷ் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பொது இடத்தில் அடக்கம் செய்யும் கோரிக்கை மறுக்கப்பட்டது. அதேநேரம், ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலி மற்றும் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய குடும்ப உறுப்பினர்கள் முடிவெடுத்ததன் பேரில் அங்கே உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button