உலகம்
Trending

நியூசிலாந்தை 92 அடி உயர சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் – ஆய்வு முடிவால் அதிர்ச்சியில் மக்கள்…!!

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. அதுபோன்ற இன்னொரு இயற்கை அழிவை எவரும் நினைத்து பார்க்க மாட்டார்கள். இந்நிலையில் நியூசிலாந்தை 92 அடி உயரம் வரை எழும்பி சுனாமி அலைகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்த இயற்கை பேரழிவு சம்பவம் 580 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள விக்டோரியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள்தான் இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதற்காக பூமியின் சுமார் 30 ஆயிரம் ஆண்டு வரலாறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் திகதி இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button