Homeஇலங்கை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம்

ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவோம் என தலைவர்கள் வெட்டிக் கருத்து கூறினாலும் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஜனாதிபதி முறையில்  மாற்றங்களைக் கொண்டு வருவதாக  ஆட்சியாளர்கள் தலதா மாளிகையில் எழுதி  கையொப்பமிட்டு கொடுத்தும் அந்தக் கதிரைக்குச் சென்ற பின் அதனை மறந்து விட்டிருக்கிறார்கள். தனக்கு பட்டம் பதவிகளில் ஆசைகள் இல்லாத காரணத்தினால் தான் அதிகாரத்திற்கு வந்த  உடனே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்து  பாராளுமன்றத்தை மையமாகக் கொண்ட  ஜனநாயக ஆட்சி முறையை உருவாக்குவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நான்காவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ருவன்வெல்ல தெஹியோவிட்ட பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள்  கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.

🟩 ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷாக்களை காப்பாற்றும் ஒரு ஐ.ஜி.பி.

தான் அதிகாரத்தை எடுக்கவில்லை என்று  பல்வேறு தரப்பினர் கூறிக் கொண்டிருந்தாலும் ராஜபக்ஷாக்கள்  உள்ள இடத்தில் தான் இருப்பதில்லை. இந்த நாட்டை அடி பாதாளத்துக்குள் தள்ளிய  ராஜபக்ஷாகளுக்கு பிரதான பாதுகாவலராக  இந்த நாட்டின் ஜனாதிபதி இருந்து வருகிறார். ராஜபக்ஷாக்களை பாதுகாக்கின்ற ஐ.ஜி.பி யாகவும், ராஜபக்ஷாக்களை பாதுகாக்கின்ற           பொலிஸ்மா அதிபராகவும் இருந்து வருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 நான் பிரச்சினைகளை கண்டு தப்பியோட வில்லை.

தான் பிரச்சினைகளிலிருந்து தப்பிச் செல்வதில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கான சவால்களில் முன் நிற்கிறேன். வேறு வேட்பாளர்களை களமிறக்கி கட்சியின் தலைமைத்துவத்தை பாதுகாத்துக் கொள்கின்ற நிலைப்பாட்டில் தான் இருந்தது இல்லை என்றும் குறிப்பிட்டார். இன்னும் சில தினங்களில் வருகின்ற ஜனாதிபதி தேர்தலுக்காக, திருடர்களுடன் டீல் இல்லாத  அரசியல் ஒப்பந்தங்களுக்காக மக்களை காட்டிக் கொடுக்காத மக்களின் வாக்குகளைப் பெற்று அவர்களை மறந்து விடாத நன்றி கடன் அறிந்த ஒரு யுகத்தை உருவாக்கி, அந்த யுகத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களை போஷிக்கும் சுவர்ண மயமான காலமாக மாற்றி  திருடர்களை பிடிக்கின்ற யுகமாக  மாற்றுவோம். திருடர்கள் மோசடிக்காரர்கள்  ஊழல்வாதிகள் ஆகியோருடன் தமக்கு டீல்  இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button