சினிமா
Trending

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் இவங்கதான் – அடித்து கூறும் ரசிகர்கள்..!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 96 நாட்களை கடந்துவிட்டது. அடுத்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற இருக்கின்றது. எனவே இறுதிப்போட்டிக்கு செல்லப்போகும் போட்டியாளர்கள் யார்? இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்கள் யார் ? என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்த வாரம் மாயா தான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அவர் தான் இந்த வாரம் வெளியேறவுள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. அர்ச்சனா, மாயா, தினேஷ், விசித்ரா, மணி ஆகியோரில் மிகவும் குறைவான வாக்குகளை மாயா தான் பெற்றுள்ளார். அதே சமயம் 50 % வாக்குகளை அர்ச்சனா அள்ளியுள்ளார். இதுவரை இந்த சீசனில் ரசிகர்களின் அதிகப்படியான வாக்குகளை அர்ச்சனா தான் பெற்றுள்ளார்.

அதற்கு அடுத்தபடியாக மணி இடம்பிடிக்கின்றார். எனவே இந்த சீஸனின் டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என ரசிகர்கள் அடித்து கூறுகின்றனர். அதைப்போல இரண்டாவது இடம் மணிக்கு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் கணித்து வருகின்றனர். முதலில் விசித்ரா தான் அர்ச்சனாவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்று வந்தார். ஆனால் சமீபகாலமாக விசித்ரா நடந்துகொள்ளும் விதம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவரின் வாக்குகள் சரிய துவங்கியது.

எனவே அர்ச்சனா அதிகப்படியான வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கின்றார். எனவே இவர் தான் இந்த சீஸனின் டைட்டில் வின்னர் என ரசிகர்கள் உறுதியான கூறி வருகின்றனர். ஆனால் ஏதேனும் கடைசியில் ட்விஸ்ட் நடக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஏனென்றால் இந்த சீசனில் ரசிகர்கள் எதிர்பாராத பல விஷயங்கள் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button