இலங்கை

பிரான்ஸில் இருந்து அதிரடியாக நாடுகடத்தப்பட்ட 14 இலங்கையர்கள்…!!

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் குடியேற முற்பட்ட 14 இலங்கை மக்களை நாட்டுக்கு மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் உள்ள Réunion தீவிலிருந்து இவ்வாறு மீள அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களே நாட்டுக்கு மீள அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மீன்பிடி படகு மூலம் கடந்த 7 ஆம் திகதி புலம்பெயர்ந்த 7 பேர், 2022 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி இடம்பெயர்ந்த 2 பேர், 2018 ஆம் திகதி புலம்பெயர்ந்த 3 பேர் மற்றும் 2019 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து புலம்பெயர்ந்த 2 பேர் உள்ளிட்ட 14 பேர் விமானம் மூலம் இலங்கைக்கு மீள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான எதிர்கால சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், Réunion தீவிற்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பிரவேசிப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு ஆதரவும் இல்லை என கடற்படை மேலும் வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறான சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டு உடனடியாக நாடு கடத்தப்படுவதன் காரணமாக மனித கடத்தல்காரர்களால் ஏற்பாடு செய்யப்படும் சட்டவிரோத குடியேற்றங்களில் பங்குபற்றுவதையோ அல்லது அவர்களுக்கு உதவுவதையோ தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button