உலகம்
Trending

மருத்துவ ஆராய்ச்சிகளை விரைவுபடுத்த குளோனிங் செய்யப்பட்ட ரீசஸ் குரங்கை உருவாக்கிய சீனா..!!

மனித உடலியல் உடன் நெருங்கிய தொடர்பு கொண்ட காரணத்தால் மருத்துவ பரிசோதனைகளுக்கு அதிக அளவு பயன்படுத்தப்படும் ரீசஸ் குரங்குகளை(rhesus monkey) சீன ஆராய்ச்சியாளர்கள் குளோன் செய்துள்ளனர்.

இதன் மூலம் மருந்துகள் பரிசோதனை(medical research) வேகப்படுத்தப்படும் என்றும், மரபணுவில் மனிதர்களுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டு இருப்பதால் சோதனைகளில் மிகச் சிறந்த உறுதி தன்மை கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக உருவாக்கப்பட்ட குளோன்கள் உயிருடன் பிறக்கவில்லை அல்லது பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்து விட்டது.

இது தொடர்பாக சீன அறிவியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ஃபாலோங் லு வெற்றிக்கரமான இந்த முடிவால் அனைவரும் மகிழ்ச்சியில் பிரகாசிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

குளோனிங் முறை என்பது, ஒரு விலங்கின் மரபணு மாதிரி நகலை தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்குவது ஆகும்.

இந்த முறைப்படி 1996ம் ஆண்டு பிரபலமான குளோனிங் விலங்கான டோலி செம்மறி ஆடு(Dolly the sheep) உருவாக்கப்பட்டது.

இதனிடையே ரீசஸ் குரங்கு குளோன் செய்யப்பட்டதற்கு விலங்குகள் நலக் குழு ஒன்று ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button