இந்தியா
Trending

முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்…!!

இந்தியா: தமிழ்நாடு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மற்றும் ஆளுநர் உரை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் வரும் 28 ஆம் திகதி வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ள நிலையில், தமிழகத்தில் சில தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. அதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் மற்றும் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button