சினிமா
Trending

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட காஞ்சுரிங் கண்ணப்பன் டீசர்..!!

அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா, நாசர், ஆனந்தராஜ், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள காஞ்சுரிங் கண்ணப்பன் படத்தின் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார்.

லியோனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் வெளியான இன்செப்ஷன் படத்தில் கனவில் நடைபெறும் விஷயங்களை கிறிஸ்டோபர் நோலன் படமாக இயக்கி இருப்பார். அதில் பேய் கதையை கலந்தது போல நைட்மேர் படங்களும் உருவாகி உள்ளன. இந்நிலையில், அப்படியொரு படத்தில் காமெடியையும் கலந்து காஞ்சுரிங் கண்ணப்பன் படத்தை உருவாக்கி உள்ளனர்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற லவ் டுடே படத்தைப் போல காஞ்சுரிங் கண்ணப்பன் படமும் பேய் ஹிட் அடிக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

லவ் டுடே வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில், இந்த படத்தின் டீசரை ஏஜிஎஸ் வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த படம் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button