உலகம்

வடகொரியாவில் இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் 30 பேர் சுட்டுக்கொலை - ஜனாதிபதி கிம் வழங்கிய தண்டனை

வடகொரியாவில் இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் 30 பேர் சுட்டுக்கொலை - ஜனாதிபதி கிம் வழங்கிய தண்டனை

வடகொரியாவில் 4000க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதற்கு காரணமான மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை தடுக்க தவறிய 30 அதிகாரிகளை சுட்டுக்கொல்லுமாறு வடகொரிய ஜனாதிபதி கிம்ஜொங்அன் உத்தரவிட்டுள்ளார் என நியுயோர்க் போஸ்ட்செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியாவில் கடந்த கோடைகாலத்தில் தீடிரென நிகழ்ந்த இயற்கை அனர்த்தம் காரணமாக 4000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

20 முதல் 30 பேருக்கு எதிராக ஊழல் மற்றும் வேலையில் அலட்சியம் குறித்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரியொருவர் அவர்களிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என அரசதொலைக்காட்சியான சோசன் தெரிவித்துள்ளது.

மழைவெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் 20 முதல் 30 ஊழியர்கள் ஒரே நேரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என அந்த அதிகாரி  தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதியே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.

எனினும் இந்த தகவலை சுயாதீன வட்டாரங்கள் உறுதிப்படுத்தவில்லை.

கொல்லப்பட்ட அதிகாரிகள் யார் என்பது குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை எனினும்,வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து பதவி நீக்கப்பட்டவர்களில் முக்கிய அதிகாரிகள் சிலர் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த அதிகாரிகள் தங்கள் தலை எப்போது துண்டிக்கப்படும் என தெரியாதநிலையிலிருந்தனர் என முன்னாள் இராஜதந்திரியொருவர் தெரிவித்தள்ளார்.

மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த மாதம் பார்வையிட்ட வடகொரிய ஜனாதிபதி இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளகட்டியெழுப்ப பலமாதங்களாகும் என தெரிவித்திருந்தார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button