சினிமா
Trending

வழக்கத்துக்கு மாறாக அஜித் செய்த விடயம் – அசந்துபோன விடாமுயற்சி படக்குழுவினர்..!!

தல அஜித் இப்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார்.இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் இந்த ஜனவரி மாதம் வெளியான துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் கூட்டணியமைத்தார் அஜித். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜார்பைஜானில் நடந்துவருகிறது. விடாமுயற்சி படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

விடாமுயற்சி படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளங்களில் எடுத்த புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது. அந்த வகையில், சமீபத்தில் அஜித், மகிழ் திருமேனி, ஓம் பிரகாஷ், ரெஜினா, அர்ஜுன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது.

இந்நிலையில் விடாமுயற்சி படக்குழுவினருக்காக அஜித் செய்திருக்கும் இன்னொரு விஷயம் இப்போது இணையத்தில் பரவ தொடங்கி பாராட்டுக்களை குவித்து வருகிறது.

அஜித் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பின்போது கிடைக்கும் இடைவேளையில் படக்குழுவினருக்காக பிரியாணி சமைத்து கொடுத்து அசத்திவிடுவார். அந்த வகையில் அஜித் நடித்த பல படங்களின் பிரபலங்கள் அஜித்தின் பிரியாணி சுவையாக இருக்குமென புகழ்ந்து பாராட்டிய விஷயம் நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக இம்முறை விடாமுயற்சி படக்குழுவினருக்காக சூப்பரான சிக்கன் கிரேவி சமைத்து கொடுத்திருக்கிறார் அஜித். அஜித் சிக்கன் கிரேவி சமைக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எப்போதும் பிரியாணி செய்கிறோமே இந்தமுறை வித்தியாசமாக சிக்கன் கிரேவி செய்யலாம் என நினைத்து சிக்கன் கிரேவி செய்திருக்கிறார் அஜித்.

அதை சாப்பிட்ட விடாமுயற்சி படத்தின் படக்குழுவினர் மிகவும் சுவையாக இருந்ததாக தல அஜித்தை பாராட்டி தள்ளி இருக்கிறார்கள். இடைவேளையில் இப்படி ஒரு சுவையான உணவை செய்து கொடுத்து அசத்திவிட்டார் என படக்குழுவினர் மிகவும் ஆனந்தமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button