இலங்கை
Trending

வாடிக்கையாளர்கள் இல்லை – மூடப்படும் நிலையில் நூற்றுக்கணக்கான பல்பொருள் அங்காடிகள்..!!

வாடிக்கையாளர்கள் வரவு குறைந்த காரணத்தால் இலங்கை முழுவதும் உள்ள ஐநூறு பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இல்லாத காரணத்தால் தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைக்க முடியாமல் உள்ளதாக பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 75% குறைந்துள்ளதாக வர்த்தக சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பல பல்பொருள் அங்காடிகளில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் இருப்பதால், தற்போதைய வருமானத்தின் அடிப்படையில் பணியாளர்களை பராமரிப்பது கடினம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button