சினிமா
Trending

‘விடாமுயற்சி’ படத்தில் இரண்டு அர்ஜுன் – ஆனால் ஒரு ட்விஸ்ட்..!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இப்படத்தின் ஷுட்டிங்கிற்கு அண்மையில் இடைவெளி விடப்பட்டது. இதனையடுத்து துபாய் பறந்த அஜித், தனது குடும்பத்தினருடன் அங்கு புத்தாண்டை கொண்டாடினார். இது தொடர்பான போட்டோஸ் மற்றும் வீடியோஸ் அனைத்தும் சோஷியல் மீடியாவினை ஆக்கிரமித்தன.

இந்நிலையில் மீண்டும் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்காக அஜர்பைஜான் திரும்பியுள்ளார் அஜித். அஜர்பைஜானில் படப்பிடிப்பில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோர் இணைந்தது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியது. ‘மங்காத்தா’ காம்போவான இவர்கள் ஒரு கேப்பிற்கு பின்னர் தற்போது விடாமுயற்சியில் இணைந்துள்ளனர். அத்துடன் பிக்பாஸ் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘விடாமுயற்சி’ படம் குறித்து தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் அர்ஜுன் என கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தில் ஒரு அர்ஜுன் நடித்து வரும் நிலையில், அஜித் கேரக்டருக்கும் அர்ஜுன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், திரிஷாவின் கதாபாத்திரத்திற்கு கயல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்துள்ள இந்த செய்தி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button