இலங்கை
Trending

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம்; இரண்டாம் வாக்கெடுப்பு இன்று..!!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற உள்ளது.

கடந்த 13ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து , கடந்த 14 ஆம் திகதி முதல் வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று வருகின்றது.

அதன்படி இன்று விவாதம் இடம்பெற்று மாலை 6 மணியளவில் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நாளை புதன்கிழமை (22) முதல் 19 நாட்களுக்கு குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது. அத்துடன், வரவு – செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button