சினிமா
Trending

23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகும் சினேகா – அரங்கமே அதிர சினேகா கொடுத்த GOAT பட அப்டேட்…!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் திரைப்படம் கோட். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த வகையில் இந்த படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்துவருகிறது. தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவருகிறது.

கோட் படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி என எண்ணற்ற நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை வைத்து பார்க்கும்போது இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. மூன்று கதாநாயகிகள் இருக்கும்போது எந்த இரண்டு கதாநாயகிகள் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார்கள் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவிவந்தது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை சினேகா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு விருது மேடையில் ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார். முன்னதாக விஜய்யின் ஒரு படத்தில் அவருக்கு அண்ணியாக நடிக்க சினேகாவை அணுகியுள்ளனர். அந்த கதாபாத்திரத்தை வேண்டாம் என்ற சினேஹா இப்போது கோட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல் கோட் படத்தில் சினேகாவின் கதாபாத்திரம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், ரசிகர்களுக்கு அந்த கதாபாத்திரம் பிடிக்கும் எனவும் கூறியிருக்கிறார். மேலும் வசீகரா படத்திற்கு பிறகு 23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் ஜோடியாக நடிப்பது சந்தோஷமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் வசீகரா படத்தில் இருப்பது போன்ற அழகான காதல் காட்சிகள் இருக்குமா என கேள்வி எழுந்தபோது படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு சினேகா மற்றும் விஜயை மீண்டும் ஜோடியாக பார்ப்பதில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி இருக்கும் என்பது தெரிகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button