இலங்கை
Trending

2600 கோடி ரூபாவை வருமானமாக பெற்றுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்…!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இந்தாண்டில் 2600 கோடி ரூபாய் வருமானத்தை பதிவு செய்துள்ளது.

கோவிட் தொற்றுநோய்களின் போது, ​​விமான நிலையம் 400 கோடி ரூபா நட்டத்தை சந்தித்தது. எனினும் இந்தாண்டில் இலாபத்தை பதிவு செய்ய முடிந்தது.

மேலும் விமான நிலையம் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட விமான நிலையமாக மாறியுள்ளதாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவத்துள்ளார்.

விமான நிலைய வளாகத்தில் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ரேடார் பொருத்துதல் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விமான நிலையத்திற்கு சொந்தமான பணத்தில் அதற்கான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கேற்ப விமான நிலையத்தின் பாதுகாப்பை போன்று எமது வான் வலயத்தின் பாதுகாப்பையும் உருவாக்க முடிந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகளவான ரஷ்ய சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், விமான நிலையத்தின் நஷ்டம் ஓரளவுக்கு குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button